Friday, February 09, 2007

வெயில்

வெயில்

வெயிலொடு விளையாடி வெயிலொடு உறவாடி
வெயிலொடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே...

நண்டூரும், நரி ஊரும் - கருவேலம் காட்டோரம்
தட்டானை சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன்குட்டை
பறிப்போமே சோள தட்ட, புளுதி தான் நம்ம சட்டை...
புளுதி தான் நம்ம சட்டை....

( வெயிலொடு விளையாடி... )

வேப்பம்கொட்டை அடிச்சி வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்தி குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணி இல்ல ஆத்துகிட்ட புல்லு அரிச்சோம்
தண்டவாளம் மேல காசு வச்சி தொலைச்சோம்

5 பைசா பில்ம் வாஙி,
அப்பாவோட வேட்டியில கண்ணாடி லென்ச வச்சி
சினிமா காமிச்சோம்

அண்ணாசி கடையில தான்,
எண்ணையில தீ குளிச்ச பரோட்டாக்கு
பாதி சொத்தை நாங்க அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொளுதெல்லம், ஆட்டம் பொட்டு திரின்சோம்,
வெயில தவிர வாழ்கையில வேர என்ன அறின்சோம்?

( வெயிலொடு விளையடி... )

வென்நிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்ட கொட்டான்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்த மண்ணுல தேச்சி பேயும் ஆட்டுனோம்

ரெக்கார்ட் டான்ச் பார்க்க மீசை ஒட்டுனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிகுவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்தினோம்

எஙக ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்பொ நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள் கொடிய பொலதான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயில தவிர வாழ்கையில வேற என்ன அறின்சோம்?
( வெயிலொடு விளையாடி... )

No comments: