Monday, April 12, 2010

இவை என் பழைய நோட்டு புத்தகம் ஒன்றில் கிடைத்தவை (1995 ல் எழுதியவை)

ஈர்த்திடும் எனை தினம்
உன் பார்வை ஒரு கணம்
நினைத்திடும் பொழுதிலும்
கவர்ந்திடும் உன் முகம்...!
(1995 ல் எழுதியது)

தூரல் போடும் நேரம்
ஈரமாகும் நெஞ்சம்
ஓரக்கண்ணால் பார்க்கும்
பாவையோடு பேசும்
நேற்றுப் பேசிய போதே
ஈர்த்துவிட்டாள் என்னை
இன்று பரர்க்கும் போதோ
பார்க்கிறாளே மண்ணை
(1995 ல் எழுதியது)

நீ
தென்றலாய்த்தான்
வருகிறாய்
ஆனால் ஏன் என்
மனதுக்குள்
புயலடிக்கிறது ?
(1995 ல் எழுதியது)

நெருப்பாய் இருந்தாய்
மெழுகாய் உருகினேன்
பூவாய் மலர்ந்தாய்
செடியாய் இருந்தேன்
முள்ளாய் மாறுகிறாயே?
பனித்துளியாய்
பற்றவா...?
(1995 ல் எழுதியது)

நெருப்பைப்
பார்த்தால் சுடாது
தொட்டால் தான்
சுடும் - ஆனால்
அவளைப்
பார்த்தாலும் சுடுகிறது
தொட்டாலும் சுடுகிறது
(1995 ல் எழுதியது)

என் அழகிய
தோட்டத்துப் பூக்களே
வாசங்களை
வைத்திருங்கள்

மொட்டை மாடி
வெண் நிலவே
நட்சத்திரங்களை
நிறுத்தி வை

மாலை நேரத்தில் பாடி
மனம் மயக்கும்
பறவைகளே
காத்திருங்கள்

என் காதலி வருகிறாள்...!