இவை என் பழைய நோட்டு புத்தகம் ஒன்றில் கிடைத்தவை (1995 ல் எழுதியவை)
ஈர்த்திடும் எனை தினம் உன் பார்வை ஒரு கணம் நினைத்திடும் பொழுதிலும் கவர்ந்திடும் உன் முகம்...!
(1995 ல் எழுதியது)
தூரல் போடும் நேரம் ஈரமாகும் நெஞ்சம் ஓரக்கண்ணால் பார்க்கும் பாவையோடு பேசும் நேற்றுப் பேசிய போதே ஈர்த்துவிட்டாள் என்னை இன்று பரர்க்கும் போதோ பார்க்கிறாளே மண்ணை
(1995 ல் எழுதியது)
நீ தென்றலாய்த்தான் வருகிறாய் ஆனால் ஏன் என் மனதுக்குள் புயலடிக்கிறது ?